என் காதல்
நட்பு கொண்ட
நாள் முதலாய்
காதலால் கைதானேன் உன்னிடம்…
என் துயரம் துடைக்க
உன்னை பெற்றொர் இல்லை என்றாய்..!
உனக்குத் தெரியாமலே
என்னை உனக்கெழுதி வைத்தேன்..!
சோதனைக் காற்றால்
உன் முதல் காதலால்
தடம் புரண்டாய்..!
மனம் கொண்ட காதலால்
என் உறுதிமொழி கையொப்பமிட்டேன்
உன் அகராதியில்..!
மூன்று முடிச்சு கடன் கொடு
உன் மன முடிச்சுகளை
நான் அவிழ்க்கிறேன் என்ற
விருப்ப மனு கொடுத்தேன்..!
ஆதரவற்ற ஏக்கம் தாக்க
என் பாசக்கயிற்றுக்குள் கட்டுண்டாய்,
பச்சைக் குழந்தையாய்..!
உன் கைவிட்ட காதல் கண்ணீரை
என் தோலில் நனைத்தாய்..!
உன் காதல் சுமை தாங்கினேன் நான்,
என் காதலை காற்றில்லா
கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்து..!
மூச்சுவிட வழியில்லா என் காதல்
கண்ணீரில்லாமல் கதறியது..!
ஐம்புலன்களையும் அடக்கி யாசித்தேன்!
மௌன மொழியில் மருகினேன்!
உன் துயரத்தை என் உயிர் ஏட்டில் எழுது
என்னாலான சந்தோஷத்தை மட்டுமே
உன்னிடம் சமர்ப்பிப்பேன் என்று
உயில் எழுதினேன்..!
உன் சிரிப்பை என் திருவிழாவாகக் கொண்டாடினேன்!
இன்று………….
என் உண்மைக் காதல்
உன் உரிமையை நிலைநாட்டியது என்னிடம்..!
"யருக்காகவும் எதற்காகவும்
உன்னை இழக்கமாட்டேன்" என்று
இரு கரங்களையும் நீட்டி வரவேற்கிறாய்
என்னையும் என் காதலையும்..!
கத்திருக்கிறேன் நான்
கண்களில் மின்னும் கனவுகளுடன்,
நம் காதல் வாழ்க்கைக்காக..!