அங்கலாய்ப்பு
வாழ்ந்தவர்களை
வாழ்கிறவர்கள்
நினைக்கிறார்கள்.
வாழ்கின்றவர்களை
வாழ்கிறவர்களே
வெறுக்கிறார்கள்.
வாழ்கின்றவர்களைப் பார்த்து
வாழப் போகிறவர்கள்
நொந்துக் கொள்கிறார்கள்
பல சமயங்களில்
என்னடா வாழ்க்கை
இதுவென்று
சலித்துக் கொள்கிறார்கள்.
இந்த
அங்கலாய்ப்புகளை
அலுப்புத் தட்டாமல் கேட்டு
நக்கலாய் சிரித்தது
வெளி வராந்தாவில்
தொட்டியில் வளர்ந்து
பூத்து மலர்ந்திருக்கும்
ரோஜாப் பூக்கள்.