இருமுனை வலிகள்
இருமுனை வலிகள்
பெண்ணா லன்று மண்விழுந்து
தன்னா லன்று கண்துறந்து
ஆரம்பித்த அழுகையது
அதுதான் இன்னும் தொடரும்கதை.
தண்ணீரில் பிறந்த உப்பு
தண்ணீரில் கரைவது போல்
பெண்ணவளால் பிறந்த தப்பு
பெண்ணாலே கரையிதின்னாள்.
தந்தை தாய் காதலாலே
வந்த நானும் விபத்து தானே!
எந்த சொந்தம் அழைத்து வந்தேன்.
வந்த பின்னே வழி மறந்தேன்.
வேண்டாத விருந்தாளியோ
தூண்டாத விளக்கொளியோ!
ஆண்டாளின் காதலாச்சோ!
தீண்டாமல் சாதலாச்சோ!
கதை இனிக்கும் காதலது
சதமானால் கசக்கிறது.
விதை போடும் காதலிது
விளையாமல் மடிகிறது.
காதலென்ற பொருளுமென்ன?
பேதமான விதமுமென்ன?
ஆதிமுதல் இன்றுவரை
நாதியற்றுப் போனதென்ன?
காதலன்றி வாழ்வதென்ன?
காட்சிக்கது பாவமென்ன?
இயல்பாக விளைவதனால்
இழிவாகும் எண்ணந்தானோ!
கொ.பெ.பி.அய்யா.
குறிப்பு:ஒரு புள்ளிதான் உலகம்!////182795///////