என் சுவாசம் உன் சுவாசத்தை தேடி 555
பிரியமானவளே...
மண்ணில் நான்
மறைந்தாலும்...
என் விழிகள் உன்னை
காண வேண்டுமடி...
கண்களை எழுதி
வைத்தேன் உலகிற்கு...
மாதந்தோறும்
உயிர் கொடுத்தேன்...
ரத்த தானம் செய்து...
இன்று என் விழிகளில்
கண்ணீரும் இல்லை...
உடலில்
குருதியும் இல்லை...
குருதின்றி உயிர்
வாழ்கிறேனடி...
ஒருநாளோ
இருநாளோ...
ஈசலின் உயிர்
ஒருநாள்...
என்னுயிரோ???...
என் சுவாசம்
நிற்கும் வரை...
என் சுவாசம் உன்
சுவாசத்தை தேடுமடி...
என் சுவாச காற்றே.....