என் காதலியே

காதலியே நீயும்
இல்லை
கண்ணில் நீரும் மிச்சம்
இல்லை
என் காதலை உனக்குச்
சொன்னேனே.
காற்றில்லாமல் நெருப்பும்
இல்லை
நீயில்லாமல் நானும்
இல்லை
என் உயிரை உனக்குத்
தருவேனே.
பூவாய் நீயும் பூக்கவே
என் உயிரை நீராய்
வார்த்தேனே!
பனிப்பூவே உன் முகம் பாராமல்
இரவும் பகலும்
வெறுத்தேனே!
காதலியே நீயும்
இல்லை
கண்ணில் நீரும் மிச்சம்
இல்லை
என் காதலை உனக்குச்
சொன்னேனே.

கள்ளிச் செடியா காதல்
அதைக் களையச்
சொல்கின்றாய்!
கானல் நீரில் மீன் பிடிக்க
தூண்டிலை நீயும்
தருகின்றாய்!
உண்மைக் காதல் தோற்காது
உன் உள்ளமும் அதனை
மறுக்காது.
காதல் இல்லா பூமியிலே
அடி காற்றும் கூட
இருக்காது......
காதலியே நீயும்
இல்லை
கண்ணில் நீரும் மிச்சம்
இல்லை
என் காதலை உனக்குச்
சொன்னேனே.
காற்றில்லாமல் நெருப்பும்
இல்லை
நீயில்லாமல் நானும்
இல்லை
என் உயிரை உனக்குத்
தருவேனே..........!!!
இப்படிக்கு,
ரா.விவேக் ஆனந்த்

எழுதியவர் : விவேக் ஆனந்த் (8-Mar-14, 1:25 pm)
Tanglish : en kathaliye
பார்வை : 112

மேலே