பாவப்பரிகாரம்

குற்றவியல் துறையிடம்
குமுறிப்பார்த்தேன்
புலன் விசாரணை செய்யச்சொல்லி
புலம்பிப்பார்த்தேன்
தடயவியல் துறையும்கூட
தடுமாறிப்போனது.
கடைசியாக ஒருமுறை
கடவுளிடம் கேட்டுப்பார்த்தேன்
கைவிரித்துவிட்டான்.
பாவமன்னிப்புக் கேட்டுவிட்டாள்;
அவள் இதயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாம்
பரிகாரமாய்...

எழுதியவர் : ஆன்றிலின் (8-Mar-14, 1:58 pm)
பார்வை : 87

மேலே