பரிசளித்துக் கொண்ட காயங்கள்
இருள் சூழ்ந்த இவ்வுலகம்...
மௌனம் சுமந்த என் வரிகள்...
விளையா நிலமாய்,
ஒரு வெற்றிடம் நமக்கிடையே தோன்றிட... அவ்வெற்றிடத்தில் தொலைய தொடங்கிய நம் காதல்....
சுகங்களில் தவழ்ந்த நாட்கள்...
சுழன்று மாறிட...
"சோகங்களின் சுவடுகள் கொண்டு,
சுவாசிக்க துவங்கினேன்"
இது எனக்கு மட்டும் இல்லை,
என்னவளே உனக்கும் தானே...
"ஆணாய் பிறந்ததால் வலி மறைத்துக்கொள்வேன்,
பெண்ணாய் பிறந்து நீ படும் பாட்டை நினைத்து வருந்துகிறேன்"
உன் கண்ணீரிலோ,
இல்லை
என் கண்ணீரிலோ,
கரைந்து விடுமோ நம் காதல்..?
"நாம் போட்ட காதல் கணக்கு
பொய்யாகி...
காலத்தின் கணக்கில்
நம் காதல் சிக்கி சிதைந்ததே"
சிரித்த வண்ணம் பிரிய வேண்டும் என்றுரைத்து
நான் அழக்கூடாது என்று
போலியாய் நீ சிரிக்க....
அது தெரிந்தும்,
உன் அழுகையை தடுக்க நினைத்து,
நானும் பொய் சிரிப்பு சிரிக்க
"நம் பொய் சிரிப்பில் அழுதது
நம் இதயங்கள் மட்டுமே"
இணைந்திட வழியின்றி தவிக்கும் இரு இதயம்,
மறந்தும் காயப்பட்டு விட கூடாது
என்ற ஒரு போலி வேஷம்...
"விதியினை மாற்ற வழியின்றி,
வலியினை பொறுத்து மாறிக்கொண்டோம் மனிதர்களாய் பிறவி எடுத்த நாம்"
பகிர்ந்து கொண்ட நினைவுகளும்...
பரிசளித்து கொண்ட காயங்களும்...
ஒரு கடிகார முள்ளாய்,
"இரு மனமும் பிரியாமல்,
இரு உடல் மட்டும் பிரிந்து வாழும் நரகத்தில்
ஓர் வனவாசம்"....!!!