நெஞ்சினை எழுதவில்லையே
இது
நான் எழுதிய
அவள் ஓவியம்
நயனங்களில்
நீலம் எழுதினேன்
இதழ்களில்
அந்தி வானம் எழுதினேன்
புன்னகையில்
முத்துகளை விரித்தேன்
மேனியை
பூங் கொடியாக்கினேன்
நாணத்தில்
குனிந்து நின்றாள்
நெஞ்சினை எழுதவில்லையே
என்றாள்
எப்படி எழுதுவது
என்றேன்
காதல்
என்று எழுது
அதுதான் நெஞ்சம்
என்றாள் !