நண்பன் கூட்டத்தில் நான் இல்லை
வடம் பிடித்த தேர் போல தினம் நாமும் தெரு தெருவாய் சுற்றி திரிந்தோமட
தினம் நமக்கு தந்த அர்ச்சனை சீட்டுகளில் இன்று நம் பெயரை காணவில்லையே!
இறகுகளின் கணம் குறைந்ததால் தானோ என்னவோ
இந்த நண்பர்கள் கூட்டமும் பறந்து செல்ல துடிக்கின்றது இன்று
நடிப்பு மழை பொழிந்தால் நகைத்து அவனை நகர்த்தி விடுவோம்
எப்பொழுதும் மனம் மாறாத மன்னனாக திகழ்ந்திடுவோம்
மண் கொண்டே மனம் போல இல்லம் கொண்டு தினம் நங்கள் அதனுள் வாழ்ந்திடுவோம்-மனம் மாறாத மழழை போல எங்களுக்குள் உறவாடி மகிழ்ந்திடுவோம்
மீண்டும் மீண்டும் நம்மோடு நாமாக உறைந்து கொள்வோம்...,
விழிகள் சற்று ஏங்குகிறது
சலனம் சற்றே சத்தம் இடாமல் எங்களுக்குள் சங்கமித்து சத்தம் இடா சலனம் தந்து யுத்தம் ஒன்றை எங்களுக்குள் கணம் ஒரு பொழுதாக தந்து கொண்டிருக்கிறது-நண்பர்கள் பிரிவில் நானும் தவழ்ந்து கொண்டிருக்கிறேன் நினைவுகளாய்!