அமரன் நான்

ஒரு
பரந்த வெளியினிலே
அலைகின்றேன்..!!

சிறகுகள்
இன்றி பறக்கின்றேன்..!!

நீல வானத்தின்
சாயத்தில் விழுந்து
குளித்தெழுந்து வருகின்றேன்..!!

கால தேவனின்
படகினை நான்
உல்லாசமாய் ஓட்டுகின்றேன்..!!

அடைமழை
மேகத்தின்
மறுபக்கம் அமர்ந்து
ஒழுகும் சூரியனையும்
அழகு நடைபோடும் நிலவினையும்
மின்னல் வாளெடுத்து
வம்புக்கு இழுக்கின்றேன்..!!

வேதத்தின்
உள் நுழைந்து
வேரெடுத்து வருகின்றேன்..!!

ஒளி வேகத்தின்
வேகத்தை
விவேகம் கொண்டு வெல்கின்றென்..!!

சாபம்
இங்கெனக்கு
சரித்திரம் படைப்பதுவா
சலனமின்றி போவதுவா..!!

வாதத்தின்
உள் விழுந்து
வேகத்தை குறைப்பதுவா..!!

ஓடுகின்றேன்
என்பதெல்லாம்
ஒரு குறிக்கோளை நோக்கித்தான்..!!

வெற்றியினை
சுமப்பதினால்
சுமை கூடும் உண்மையன்றோ..!!

ஓரிடம்
எனக்குப் பிடிக்கவில்லை
உறைந்துவிடுவேன்
இல்லையென்றால்
எரிந்து சாம்பலாகிடுவேன்..!!

ஆதலாலோ
ஆடிக்கொண்டே இருக்கின்றேன்

இசைமீட்டி
அசைந்துகொண்டே இருக்கின்றேன்..!!

இன்பத்தில் மூழ்கி
துன்பத்தில் எழுகின்றேன்

துயரத்தில் விழுந்து
உறவுகள் எடுக்கின்றேன்..!!

சிறைக் கம்பிகளை
உடைக்க முடியாமல்
சிலசமயம் தவிக்கின்றேன்..!!

சிறுவிரல்
நகம்கொண்டு
பெரும் பாறை உடைக்கின்றேன்..!!

ஒரு
வெற்றுக்காகிதமாக
இவ்வுலகினை
பார்க்க பறந்தோடி வந்தவன் நான்..!!

எனது
கனவுகளையும்
கற்பனைகளையும்
அனுபவங்களை
ஆதங்களையும்
காதலையும்
வேதனையும்
இன்ன பிறவற்றையும்
அதனுள் நான் எழுதிவைக்கின்றேன்..!!

பிடித்தவர் இரசிக்கின்றார்
பிடிக்காதவர் கிழிக்கின்றார்..!!

சளைக்காமல் நான்
தேடித் பிடித்து
எடுத்து ஒட்டிவைத்து
பறக்கின்றேன்
எழுதுவதை நிறுத்தாமல்..!!

எனக்கானது
என்னுள் இருக்கும்
எனக்கே எனக்கானது
என்னுள் மட்டுமே இருக்கும்

எவருக்கும் சொந்தமில்லை
எனக்கும்
அது ஒருநாள்
என்னுடையது இல்லையென்று
ஆகிவிடும் தருணமும் வருமல்லவா..!!

அன்றும்
எவர்க்கும்
இது சொந்தமில்லை..!!

அன்றும் நான்
அலைந்துகொண்டே இருப்பேன்..!!

சிறகுகள் இன்றி
பறந்துகொண்டே இருப்பேன் நான்..!!

என்
எழுத்துக்களை சுமந்தபடி..!!

என்றும் அமரன் நான்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (9-Mar-14, 1:25 pm)
பார்வை : 101

மேலே