குப்பை கூலம்
பூமித்தாய் புலம்புகின்றாள்
மாசுகளாலும் தூசுகளாலும்
மூச்சுத திணறி தவிக்கின்றாள்
குப்பைகளாலும் கழிவுகளாலும்
மூர்ச்சையாகி கிடக்கின்றாள்
மனித கழிவுகள் ஒரு புறம்
எலக்ட்ரானிக் கழிவுகள் மறுபுறம்
ஆஸ்மாவினால்
அல்லாடும்பூமித்தாய்
அய்யகோ... பாவம்
அவளால் கண்ணீர் சிந்தவும்
முடியவில்லை
அதுதான் பூமியில் மழையே இல்லை..
காரணம் நமக்கு புரியவில்லை இருந்தும் அதற்காய் வருந்தவில்லை
சிந்தை தெளியா மனித இனம்
பூமிக்கு வாய்த்த சாபம் சாபம்