சில்லென சில சென்ரியூக்கள்

அந்தப்புரத்தில் ஆண்கள் குடியேற்றம்
அடுப்படிக்கே பெண்கள் வெளியேற்றம்
வாய்பிளக்கும் பெண்ணியம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவள் ஆழ்மனதில் கணவன்
கணவன் மனதில் அக்காமகள்
இவள் மனதில் ஆயிரம்பேர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீட்டினில் பூட்டப்பட்ட தாய்
போத்தலுக்கு அடிமைப்பட்ட தந்தை
சொந்த விலாசமறியா சேய்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திடுக்கிடும் பேச்சு
எவரையும் எதிர்த்திடும் நெஞ்சு
பணமுள்ள பாதகனுக்கு .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அந்த வீதியெங்கும்
கிழிந்து போன மார்புக்கச்சுகள்
மலிந்து கிடக்கும் வன்புணர்ச்சி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சமூக சீர்கேடுகளை சில்லென மூன்று
வரிகளில் கொண்டு வரும் வடிவம் இந்த
சென்ரியூ 5:7:5 எனும் அசை மரபில் யாப்பிலக்கணம் கொண்டவை என்றாலும் இப்போது யாப்புகள் மீறப் பட்டு எழுதப் படுகிறது .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : இமாம் (9-Mar-14, 9:24 am)
பார்வை : 159

மேலே