பிச்சையின் மரபு
மாற்றங்கள் வேண்டுமென
முடிவு செய்தான்...
முடிவுகள் மாறாதது...
கலாசாரத்தினை உடைக்க வேண்டி
கங்கனம் கட்டினான்..
மரபுகளை உடைத்தெறிய வேண்டும்...
பின் தூங்கிய இரவினிலே
முன்னோக்கிய சிந்தனை அது...
எத்தனை நாட்களுக்கு தான்
இரவு நேர பிச்சைகாரானாய்
இருப்பது...?
இனி பகல்நேர பிச்சைக்காரனாக
இருக்க வேண்டும்...
இரவு நேர நிலா கதைகளோடு
இனி தொலைந்து போகட்டும்..
இரவு நேர பிச்சைக்காரனின்
மரபுகளும், வலிகளும்....