மனித துரோகிகளே

அடே மனித துரோகிகளே -கொள்கையென்று கொலைவெறி கோலத்தில் மனிதன் ,
குண்டுவெடிப்புகளால் கொலைக்களம்
ஆகும் உலகம் .......

மனித தர்மத்தை மறந்துவிட்டு
மத தர்மத்திற்காக போராடும்
இயந்திர இதயங்களே
எதற்கு இந்த கொலைகள் ......

உணர்விழந்த துரோகிகளால்
உயிரை இழந்தவர்களும்
உறுப்புகளை இழந்தவர்களும்
எத்தனை எத்தனையோ .......

நீரோட மறந்த பாலை வானத்திலும்
ரத்த ஆறு ஈரமாக்கி கொண்டிருக்க மறுத்ததில்லை
இறந்த பின்னே காணும் நரகத்தை
இருக்கும் போதே காண்கிறான் அப்பாவி .....

மிருகத்தையும் பறவையையும்
வதைக்க விரும்பாத இறைவன்
எந்த புத்தகத்திலும்
மனிதனை வதைக்க சொல்லவில்லை ......

துரத்தும் புலியாகவும்
பதுங்கும் மானாகவும்
மனிதனுக்குள்ளே எத்தனை
பரிணாமங்கள் .......

சமாதானத்திற்கு பதில்
சடலங்களின் மீதுதானா
உங்கள் கொள்கைகளின் கோட்டையை
எழுப்ப போகிறீர்கள் ........

அழுகுரலையும் அதிர்வுகளையும்
காற்று சுமக்காத நாள் இல்லை
கண்ணீரை மண் ருசிக்காத
மணிநேரங்கள் இல்லை .....

அன்பையும் நேசத்தையும்
பகிர்வதுதான் ஆண்டவனின் விருப்பம்
ஏன் அனைவரின் விருப்பமும் அதுதான் ,
ஆனால் நடப்பது .......

கூறுகெட்ட சிலரின்
குருட்டு கொள்கைகளால்
குருதி கொட்டுகிறது தினம்
கூனி குருகுது மனம் ......

புனித போராட்டமென்று
மனித உறவுகளை கொள்வது என்ன நியாயம் ?

ஆண்டவனின் பெயரில்
அநியாய கொலைகள்
தட்டி கேட்ட தயங்கும் மனங்கள் !

நியாயத்தை மாற்றி
நேரத்தை வீணடித்து
காலத்தை கழிக்கும் முட்டாள்களே
கொஞ்சமாவது சிந்தியுங்கள் ........

யாருக்கும் உதவி செய்ய தேவையில்லை
உபத்தரவம் வேண்டாம் ....

மனிதனுக்கு மனிதன் துரோகம் செய்வது
மன்னிக்க முடியாத குற்றம்
திருந்துங்கள் மற்றவரையும் திருத்துங்கள் ....

புனித போராட்டமென்று
மனிதனை கொள்பவனே
நாளை உனக்கும் காத்திருக்கிறது
ஓர் அகால மரணம் -
நினைவில் வைத்துக்கொள் .......

எழுதியவர் : வினாயகமுருகன் (9-Mar-14, 7:15 pm)
பார்வை : 233

மேலே