தூக்குமேடை தூக்குமேடை

சுதந்திரம் பெருவதற்கென்றும்
கடன் தொல்லையென்றும்
காதலில் தோல்வியென்றும்
குடும்ப குளறுபடியென்றும்
வறுமையின் வாட்டயென்றும்
அரசின் நியதி சட்டமென்றும்
வரிசைகளாய் அணிவகுத்து
ஒன்றன்பின் ஒன்றாய்
தொடர்ந்து தொங்குகின்ற
உயிர்குடிக்கும் தூக்குமேடை
கொலை பலாத்காரமென்று
மனிதம் மற்றும் சமூதாய
சீரழிப்பிறக்கும் தீங்கிழைத்து
சுதந்திரமென்று சுற்றித்திரிந்து
பிறரின் சுய சுதந்திரத்தை
பறிப்பவர்க்கும் தூக்குமேடை
தூக்கு துடிதுடிக்க வைத்ததால்
துடிதுடித்து போனதிந்த உயிர்
குற்றத்திற்காய் உருவான
தண்டனையா !!!!!
குற்றம் நடவாதிருக்க
தண்டனையா????
எதுவாயினும் அமைதிநிலவ
தண்டனைகள் அவசியமானது ,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (9-Mar-14, 9:10 pm)
பார்வை : 186

மேலே