பனிப்பொழிவு அனர்த்தம்

இயற்கை அன்னையின்
இடப்பெயர்ச்சி
இவ்வுலகில் அங்காங்கே
இன்று பனிப்பொழிர்ச்சி....

பகலவனும் ஓய்வெடுக்க
என்னினானோ
பரனியெங்குமே ஒரே
குளுமை புரட்சி....

வெண்நிற மேகமும்
உறைந்ததால்
காய்கிறதே, சறுகாகி
உடைந்து....

சிதறி சொறிகிறது
பனித்துகள்களாய்,
குளிர் வீசும் தென்றலோடு
ஊசிமுனை சாரலாய்....

பஞ்சு மேனியை வெண்பனி
துகல்கள் மூடிக்கொள்ள
உடலோ தேடுது விறகொண்டு
எறித்த தணலடுப்பை....

பாதைகளெங்கும் பச்சைத்
தாவணியனிந்த மரங்கள்
ஆடைகளைந்தவள் போல
தோற்றமளிக்க....

சிறுக சிறுக சேர்ந்து
பனித்துகல்கலாள்
தொப்பியணிந்துள்ளன
மரமும், வீட்டுக்கூரையும்....

நாகரீகமென அரை குறையில்
அலைந்தவரெல்லாம்
இழுத்து மூடிக்கொள்ள கம்பளி
தேடியலைகின்றனர்.....

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (9-Mar-14, 9:42 pm)
சேர்த்தது : Iam Achoo
பார்வை : 1351

மேலே