பெண் கல்வியின் முக்கியத்துவம்
கருவறையில் கலங்கிடாமல்,உயிர் கலங்கி சுமந்த அன்னை அவளும்!
தாய்மையின் பண்பை தமிழ் மொழியில்,
கற்றவள் தான்.
அன்னையின் அரவணைப்பில், அன்பின்!
ஆழத்தைக் கற்றேன்.
தோளில் சுமந்த தந்தையின் பாசத்தில்! அறிவின் நுணுக்கத்தைக் கற்றேன்.
கல்விச்சாலையில் தான் குருவின் அறிவுரையில்!
உலக நடப்பை உணர்ந்தேன்.
கல்வி கற்ற பூமகள், சாலைஓரம் மலர்ந்த
மலர்கள் அல்ல,
கலைக்கூடத்தில் வைக்கப்பட்ட,
புதிய புத்தகம் அல்லவா!
பெண் கல்வி தன்நலத்தின் வெளிப்பாட்டை உடைத்து,
சமுதாயத்தில் புதிய சரித்திரத்தின் தேடலை!
உயிர்ப்பிக்கிறது.
புதிய தலைமுறைகள் தளைத்திட,
அறிவின் நுணுக்கத்தை அறிந்திட,
பாவையின் கல்வி,பாரதத்திற்குத் தேவை!
பனி படர்ந்த மலர் போல,பண்பான பூமகளும் வாழ்கிறாள்!
கல்விக்கரையில் விதியை புதிதாய் உயிப்பித்திடவே!
பெண் கல்வி முக்கியம்,
பெண்ணுக்காக மட்டுமல்ல ,
நம் பாரதத்தின் புதிய சரித்திரத்திற்காக!