சிகரம் தொடலாம் சீக்கீரம் வா

சின்ன, சின்ன, முயற்சிகள் செய்தே
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சிந்தையை பணியில் வைத்தே நீயும்,
சிரத்தை கொண்டு செயல் பட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சிந்தனை சிறகை விரித்து நீயும்
சீரிய வெற்றிகள் பலவும் ஈட்டின்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்னதோ, பெரியதோ, செய்வதை நீயும்
செவ் வனவே திருந்த செய்தலே
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
செய்யும் தொழில் தனை நாளும்
சிறப்பாய் நீயும் செய்து விட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்ன பணியே ஆயினும் நீ
சீரிய வெற்றிகள் பெற்று வீட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்ன, சின்ன, நம்பிக்கை அக்தை
சீரனா முதலாக்கி வாழ்வு அக்தில்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சிட்டு குருவி அதின் சுறுசுறுப்பு
சின்ன எரும்பு அதின் உழைப்பு
சீக்கிரம் நீயும் கற்று விட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!

எழுதியவர் : kunthavaivanthiathevan (9-Mar-14, 8:09 pm)
பார்வை : 2469

மேலே