வெகுண்டேழுவாய் வீரப்பெண்ணே

வேலியே பயிரை மேயும் காலமிது
வெகுண்டு நீயும் எழுந்திடம்மா
ஜாலியாய் அதனை
தொலைக்காட்சி ஒளிபரப்ப
குடும்பமே அதனை காணுதம்மா

பூவின் காம்பில் முள்ளெதற்கு
பூவை பறிப்பவன்
கை பதம் பார்த்திடவே
வேறோர் கை வந்து காக்குமென்று
வீணே நீயும் இருக்க வேண்டாம்

வீறு கொண்டு எழு பெண்ணே
இனி வரும் காலமுனக்கென்று
பறை சாற்று பெண்ணே
வீணர்கள் நிறைந்த பூமியிது
வீறாய் நிமிர்த்து நில்லு பெண்ணே

வறண்ட பூமி அடியிருந்து
முட்டி மோதி எழும்
முளை போலே
வெட்ட வெட்ட வரும் நகம் போலே
வெகுண்டேழுவாய் வீரப்பெண்ணே

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-14, 7:47 pm)
பார்வை : 105

மேலே