ஹைக்கூ
இ சி ஜி - யை பார்த்து பார்த்து
அதுபோலவே ஆகிவிட்டது
மருத்துவர் கையெழுது
--------------------------------------------
மரணக் குறிப்பாய்
மாறிப்போகும்
மருந்து சீட்டுகள்
--------------------------------------------
இறக்கைகள் முளைக்கும் முன்னரே
விண்ணை அடைகின்றன
பட்டுப்புழுக்கள்
--------------------------------------------
மகள் இறந்த சோகத்தில்
மார்பகங்கள் அழுதன
- சிசுக்கொலை
-------------------------------------------
முதலும் கடைசியுமாய்
நெல் சோறு!
- சிசுக்கொலை
-------------------------------------------
உடல் வலியைவிட
அதிகமாய் வலிக்கிறது
ஊசிபோட்ட வலி
------------------------------------------
கல்லறையாய் மாறிப்போகும்
ஊரோரக் குப்பைத்தொட்டிகள்
- சிசுக்கொலை
-----------------------------------------
பெண்பிள்ளைகள் பிறக்கும்
ஊருக்கு பஞ்சம் பிழைக்க போயின
வெறிநாய்கள்
-----------------------------------------