உதிர்ந்த பூக்களின் ஆறாத ரணம் 555

பெண்ணே...

விண்மீன்களை ரசிக்க
இரவினை விரும்பினேன்...

பனித்துளியை ரசிக்க
பகலினை விரும்பினேன்...

தாமரையை ரசிக்க
கதிரவனை விரும்பினேன்...

அல்லியை ரசிக்க
சந்திரனை விரும்பினேன்...

வாழ்வினை ரசிக்க
காதலை விரும்பினேன்...

உலகை ரசிக்க
உன்னை விரும்பினேன்...

என் வாழ்வையே
வெறுக்க வைத்தாயடி...

மலர்ந்த மலர்களை
ரசித்த நான்...

வாடிய மலர்களை
ரசிகிறேனடி...

வாடிய மலர்களை
நீ ரசிக்க மாட்டாய்...

வாழ்வை
தொலைத்த நான்...

இனி ஆசை வைக்க
மாட்டேனடி...

வாடிய மலராக
இனி என் பயணம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Mar-14, 3:47 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 386

மேலே