எனக்கு எதற்கு இந்த வாழ்க்கை

வலிமையுரும் வம்தமிழ்

*எனக்கு எதற்கு இந்த வாழ்க்கை *

எத்தனையோபேர் பட்டினியல் உழல்கிறார்கள்
நானும் அவர்களோடு பிறந்து அழிந்துபோய் இருக்கலாமோ
கஷ்டப்பட்டு வாழ்கையில் முன்னேற அவர்களுக்கு வாழ்வாதாரம் ஒன்றுமில்லையே
என்னை போன்ற கை கால் முகம் உடல் கொண்ட மனித உயிரினங்கள் பல பட்டினி பசியில் உயிரிழந்து போகின்றனவே

எப்படிச்செத்தால் என்ன ?
எல்லாம் ஒரே சாம்பல்தான் .

தண்டவாளத்தில் அமர்ந்து ஒரு குழந்தை கருங்கல்லை போம்மைக்கல்லாய் சிலைவடிவம் தந்து விளையாடுகின்றது
பெற்ற அம்மா இறந்து போனாளோ?
பெற்ற அப்பா இருக்கின்றானோ?
ஒரு நொடி மரணம் உடன் கைக்கொண்டு
அந்தக் குழந்தையின் உடல் சிதறிவிடும் கொடூரம் .
யாருக்குத்தெரியும் அந்தப் பிஞ்சு
சிதைந்துபோனதோ ?இல்லை சிதைக்கப்பட்டதோ ?
ஊருக்கே தெரியும்படி அந்தப் பிஞ்சு உடல் சிதறி செய்திதாள் எழுத்துக்களில் உயிர் துறந்திருக்கும் பொது .
யார் மனம் வெந்து நொந்து
என்ன புண்ணியம் ???

சிந்திப்போம்.
ஒரு துளியாவது
சிந்திப்போம் .


-இளந்தமிழ்
கவிஞன்
வம்தமிழ் .

எழுதியவர் : இளந்தமிழ் கவிஞன் வம்தமிழ (10-Mar-14, 5:29 pm)
சேர்த்தது : R.Raguraaman
பார்வை : 147

மேலே