யார் சொன்னது

என் கறுப்பு வெள்ளை கண்களிடம்
யார் சொன்னது ?
உன்னைப் பார்த்தவுடன் வண்ணமயமாய்
விழித்திரையில் பதிவுசெய்ய வேண்டுமென்று

இயல்பாய் துடிக்கும் என் இதயத்திடம்
யார் சொன்னது?
உன்னைப் பார்த்தவுடன்
வேகமாக துடிக்க வேண்டுமென்று

இனிதாய் பேசும் என் நாக்கிடம்
யார் சொன்னது ?
உன் பேரை உச்சரிக்கும்போது
இசையோடு உச்சரிக்க வேண்டுமென்று

நீ நீயாக இருக்க
மாற்றம் மட்டும் என்னிலா !!!

எழுதியவர் : ஜான் பிராங்க்ளின் (10-Mar-14, 7:08 pm)
Tanglish : yaar sonnathu
பார்வை : 198

மேலே