அன்னையின் மடியினில்
காரிருள் கிழித்து
காட்சிக்கு வந்துதித்த
மின்னல் போல் ...
கண்முன்னே காணாமல்
கருவில் உதிக்காமல்
பாலூட்டி வளர்க்காமல்
நீயும் வளர்க்கிறாய்
உந்தன் அன்பென்னும்
அமுதூட்டி ...
இல்லையொரு
பிள்ளையென்று
இனி ஏங்கித் தவிக்காதே ...
இதோ நானிருக்கிறேன்
உந்தன் உத்தம மகனாக ...
“அம்மா “
உன் உதிரம் குடிக்கவில்லை
பிறவி வலி கொடுக்கவில்லை
ஆனால் அன்பெனும்
உயிர் வலி கொடுக்கும்
பாவி நான் ...
உந்தன் பாதம் தலைசாய்த்து
கண்ணுறங்க நான்
விழித்திருக்க ...
நீ என் மடி சாய்ந்து
கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ ...