இருமனம் திருமணம்

திரும்பிப் பார்க்கின்றன
திங்கள் முன்
தில்லையாடியம்மையும்
திருவளர்ச்செல்வனும்
திறந்து கலந்த
தினங்களை
அங்கலாய்ப்பாய்
அருந்ததியும்
அம்மிக்கல்லும்.....
பரிசம் போட்ட
பகல் முதல்
பாலோடு
பழமுண்ட
பால் நிலா
இரவுவரை
வலித்ததும்
இனித்தது
இருள் நீங்கியபின்
இமை திறந்தபின்
இனித்ததும்
கசந்தது.....
அவனுக்கும்
அவளுக்கும்
இடையில்
காதலா
ரதியின்
காதலனா
தெரிந்தது
தொன்னூறு
நாளில்
தெரிந்த பின்
பிரிந்தது
முந்நூறு
நாளில்.....
ஆயிரம்பேர் கூடி
செய்தாலும்
அவர் மனதில்
அரும்பிச்செய்தாலும்
இருமணம்
இணையும்
திருமணத்தில்
காதலினர்த்தம்
புரியாதவர்கள்
புவியில்
புலனுக்கடங்கும்
வீணர்களே......
காதலனுக்கு
காதலியின்
கடைக்கண்ணும்
காதலுணர்த்தும்
கழைத்துப்பார்க்கவேண்டிய
அவசியமில்லை.....
சதையாசை
சதை கிடைத்தால்
தாவும்
காதலாசை
மனம் பார்த்து வரும்
மரணம் வரை வரும்...
அருந்ததியும்
அம்மியும்
அழுகின்றன
சதைமணக்கோலம்
காணும்
தில்லையாடியம்மைகளையும்
திருவளர்ச்செல்வன்களையும்
கண்டு.....
இருசதை
இணைவதை
இனியாவது
திருமணம் என
கொச்சைப்படுத்தாதீர்கள்
இருமணம்
இணைவது
இமைகள் கலந்து
இதயங்கள்
இடம் மாறும்
இடங்களில் மட்டுமே....
அங்கே
அருந்ததிக்கும்
அம்மிக்கல்லுக்கும்
அவசியமுமில்லை
காதலோடு
ரதியின்
கணவனுக்கென்றும்
குறைவுமில்லை.....