விநோதம்
புழுதி பறக்கும் சாலை
இரு சக்கர வாகனத்தில்
தந்தை, தாய் அமர்திருக்க,
முன்னே மூன்று வயது சிறுவன்
புழுதி பலமாய் பறக்க…..
அவசரமாய் தலைகவசதின் கண்ணாடியை
சரி செய்தான் தந்தை, கைகுட்டையால்
முகம் மூடினால் தாய்,
சிறுவன் சிரித்தபடியே வேடிக்கை பார்த்தான்