எது வேண்டும்

வேண்டும் வேண்டும்
ஒவ்வொரு வீட்டிற்கும்
கதவுகளும் சன்னல்களும்
வேண்டாமே நமக்கு
கூச்சலும் குழப்பமும்...!
வேண்டும் வேண்டும்
சுட்டெரிக்கும் சூரியன்
ஒவ்வொரு திசைக்கும்
வேண்டாமே நமக்கு
அறிவை மூடும் உறக்கம் ...!
வேண்டும் வேண்டும்
நல்லதைப் பேசும்
பூக்களும் கிளிகளும்
வேண்டாமே நமக்கு
கேலியும் கிண்டலும் ..!
வேண்டும் வேண்டும்
தேடல்கள் எப்போதும்
வேண்டாமே நமக்கு
பாவத்தோடு மரணம் ..!
நம் வாழ்க்கைக்குத்
தேவையான இவைகளில்
எது வேண்டும்?