தேசியகீதம்
அங்கே.....
எல்லோரும் எழுந்து
நின்றுகொண்டு......
ஆங்காகே
சில சுவாரசிய பேச்சுக்கள்
பல சோம்பல் முரிவுகள்...
ஓயாமல் எதுகிடைத்தாலும்
அசைபோடும் வாய்கள்...
சைகையில் பேசிக்கொள்ளும் கைகள்
அலைபாய்ந்து கொண்டிருக்கும் கண்கள்
சினுங்கும் கைப்பேசிகள்
என இத்துனையும் அரங்கேறும்
வேளையின் பின்னொளியில்...
அநாதையாக்கபட்ட குழந்தையாய்
அழுது கொண்டிருக்கும்
தேசியகீதம்!!!!