அந்தாதி போலி

கூந்தல் திருத்தி கொஞ்ச மலர்சூடி
குறுவிழி நகைசெய்ய குரலொலி
இசைபொழிய இதயம்திருடி அசைந்து இளநங்கை போனாள் மனங்கவர்ந்து.

கவர்ந்து என்மனம் களவாடிச் சென்றாலும்
கண்விழி மயங்க கருத்தினில் நிறைந்து
கனவிலும் உன்முகம் கண்மூடா நிலைதந்து
கானல் நீராய் கலைத்தது நெஞ்சை.

நெஞ்சமதில் உன்முகமே கனலாய் தகிக்க
கஞ்சமலர் நின்பூவடி கண்டுதன் மலரிதழ்
வாடவான் நிலவு கருமேக நிழல் தேடி ஓட
வாடும் என் நெஞ்சம் நாடும் உன் மனம்.

மனம்தேடி உன்மலர் தடம்பற்றி வருமென்னை
குணம்நான்கும் நிறைநீயோ மருள்விழியால் மயங்கியோட
மறித்து மலர்ந்த என் காதலைக் கூற
விரலால் முகம் மறைத்து சிந்துவாய் நகை.

நகைக்கும் நின்முகம் நாடிஎன் முழுமையும்
திகைக்கும் படிஉனக் களிக்க களித்து
மயக்கும் முத்தப் புன்னகையால் கொத்தி
எனைவதைப் பாய்கூர் விழிமானே.

மான்விழி கொண்டு தேன்மொழி சிந்தி
வாய்முத் தம்தந் தவளே சிந்தையது
உனக்கடிமை செய்ய செப்பும்உன் ஆணைக்காய்
அணைக்க காத்திருப்பேன் அழகி உனை.

எழுதியவர் : த.எழிலன் (11-Mar-14, 10:59 pm)
பார்வை : 79

மேலே