சும்மாவா படைத்தான்
விதைதனில் உறங்கும் விருட்சம்
வெளியில் தெரியாது
கல்லில் சிலை இருக்கும்
கண்ணுக்கு புரியாது
காற்று வழி மகரந்தம் பரவி ்
கருவுருதல் நடக்கும் என்பார்
காட்சிக்கு விளங்காது
என்று கரு ஜனித்ததென்று
தாய்க்கே தெரியாது
கண்ணுக்கு தெரியாமல்
காட்சிக்கு புரியாமல்
எத்தனை திறமை
இங்கே ஒளிந்து கிடக்கிறதோ?
சிறு துரும்பையே
பல்குத்த படைத்தவன்
சும்மாவா படைத்திருப்பான்
அரிதான மானுடப் பிறப்பை

