ஏக்கம்
உன்னுள் உறவு என்னுள் சுகம்
உன்நினைவு என்னுள் இரணம்
உமது உருவு கண்டு உள்ளம் உறங்காது
உருண்டேன் ,புரண்டேன்
உயிரற்ற தலையணையும் உதறி தள்ளியது
உன்னைப் போல் மென்மையாய் .
உறக்கம் தொலைத்தேன்
உன் உணர்வை தொலைக்காது .
உமது கரம் உரச
காயமானது மனம்
காமமானது அகம்
மருந்திட வேண்டாம் பெண்ணே !
உமது கரம் கொடு
காயம் மாயமாகும் .
நீரோடையாய் எனது மனம்
இரு விழிகளில் சிக்கி உன்பின்னால் ஓட்டம்
உமது கரம் பட்ட ஆடையை
கசக்க மறுக்கிறது மனம்
கைரேகை களவு போய்விடுமென்று .
நீ புவிந்தெழுந்த நாள்தனில்
இனிப்போ இன்ப பரிமாற்றம்
அருகே அமர்ந்ததும் உன் தலை
என் கரம் உரசும்
உனது கைகள் எனது கால்படரும்
என்னுள் உள்ளம் படபடக்கும்
உடலில் உஷ்ணம் ஏறும்
நெற்றியில் வியர்வை எட்டிப்பார்க்கும்
இதழ் வெளுத்து சகரவாகும் .
இளையகவி