கவிதைகள் ஏன் தோன்றுகின்றன

வரையாமல் வளைந்த
வஞ்சியுன் புருவம் மேலே
வைத்த வண்ண பொட்டுக்கள் யாவும்
வானவில்லின் முதுகில் அமர்ந்து
வண்ணம் காட்டும் மின்மினியோ..?

கண் சிமிட்ட நான் மறந்தேன் - மின்மினி
கவி படிக்க மனம் ரசித்தேன்....

பிறகு தெளிந்தேன் - அது

இரு மீன்கள் எதிரெதிராய் இருந்து கொண்டு
இதமாய் தன் வால் வழியே பந்துகளை
இனிதாய் அடித்துப் பிடித்து
இன்பமாய் - ஜெட்லிங் - விளையாடுவதாய்
இயற்றிப் பார்த்தேன் கனவுகளை.....

காதலித்தால் கணப் பொழுதுகள்
கருத்தினிலே கவிதை என்பேன்
கன்னி விழிகள் காணாமல் உலகில்
கவிதைகளே இல்லை என்பேன்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Mar-14, 4:33 pm)
பார்வை : 84

மேலே