எழுதுகோல்

எல்லா கோள்களையும்
ஆளவல்ல செங்கோல்!
விழுதுபோல்
மண்ணில் நம்பிக்கை
வேர்பிடிக்கும்
எழுதுகோல்!
உன் 'மை' யானாலும்
என் 'மை' யானாலும்
எம்'மை' யானாலும்
உண்மையான நன்'மை' ஈந்து
நம்மை காக்கும்
நம் 'மை'ந்தன்
எழுத்துக்கடலில்
காகிதக்கப்பலை
சத்தியக்கரை நோக்கி
செழுத்தும் துடுப்பு!
ஆறாம் விரலாய் இருந்த
எழுதுகோல்
'ஒரு ஊர்ல ஒரு எழுதுகோல்'
என்று வருங்கால கதையின் நாயகனாகிவிடுமோ?
என்ற கேள்விக்கு
பதிலாகும் ஆச்சர்யக்குறி!