யாரோ வினோதன்

முகம் மூடிக்கிடக்கும்
முக முடிகளை
காதல் தோல்வி
முகாமின் முகமாய்
அறிவித்தது யாரோ ?

மேலுதட்டின் மேலாக
வளரும் கரும்புற்களை
வீரத்தின் இலச்சினையாய்
நிர்மானித்த தாரோ ?

வழக்கமாய் வலக்கையில்
கடிகாரம் கட்டுபவனுக்கு
திமிங்கிலத் திமிரென
தீர்மானித்தவர் யாரோ ?

புடைத்த மூக்குடன்
படைப்பெடுத்தவனுக்கு
கோவம் கோலோச்சுமென
குறிசொன்னவர் யாரோ ?

கருத்த திசுவடையை
அதிஷ்டத்தின் அடையாளமாய்
பிரகடனப் படுத்தி
பிரசாரம் செய்தது யாரோ ?

நீளும் யாரோக்களின்
நிழலோரம் யாரையும்
காணோம் - சில கேள்விகள்
பதில்களுக்கு அப்பாற்ப்பட்டவை !

எழுதியவர் : வினோதன் (13-Mar-14, 9:57 pm)
பார்வை : 91

மேலே