பேராற்றல்

மண்ணை முட்டி
முளைக்க நினைக்கும் விதை

விண்ணை முட்டி
பறக்க நினைக்கும் பறவை

தண்ணீரைத் தாண்டி
மலரத் துடிக்கும் தாமரை

பாறையைப் பிளந்து
வெளிவரத் துடிக்கும் நீரூற்று

எரிமலையை விட்டு
வெளியேறத் துடிக்கும் நெருப்பு

இவையனைதுக்குள்ளும் புதைந்து
கிடக்கிறது ஆற்றல்!

இவை அனைத்தயும் விட
மனித ஆற்றல் பேராற்றல் அல்லவா?

எழுதியவர் : திலகா (13-Mar-14, 7:54 pm)
பார்வை : 78

மேலே