நாய்களே நாய்களே - கே - எஸ் - கலை
நாய்கள் ஒன்றும்
எலும்பு விரும்பிகள் அல்ல
சதை கிடைப்பதில்லை !
==
ஓநாய்கள் நரிகள்
எலும்புகளை தின்பதில்லை
அவை அடிமையில்லை !
==
நாய்களின்
முதியோர் இல்லங்கள்
வீதிகள் தான் !
==
நன்றியுள்ளவன்
அடிமைப்படுத்தப் படுவான்
நாய்களைப் பாருங்கள் !
==
நாய்களின் புது எதிரி
வாயிலில் காவல் பார்க்கும்
"கடி நாய் கவனம்" !
==
வீட்டுக்காரியோடு கோபம்
பாதையில் செல்பவனைக் கடித்தது
"போலிஸ்" நாய் !
==
இறைச்சி இல்லா எலும்பை
கடிக்கும் நாய்களுக்கு தெரியும்
அரசியல் விளையாட்டு !