====வெண்முகிலே ======

நீரடைத்த பந்தே வானில்
நிலைகொண்ட வெண்மேகமே...
நடைபயிலும் மழலையாய்
நீ
தவழ்ந்துவர தொலைகின்றேன்...
நிலவோடு நீயாடும்
கண்ணாமூச்சித் தனை
இமைக்காமல் நாளும்
ரசிக்கின்றேன்...
சேர்த்துவைத்த பன்னீரை
இறைக்கின்றாய்
பூமண்டலம் போல் யானும்
பூக்கின்றேன்.
எனை
எடுத்தாலும் உனைக் கவர
எத்தனித்து நீராவியாய்
உன்னில் நான் நிறைந்துவிட்டேன்...