வெள்ளியாய் கவியென்று

வெள்ளியாய் கவியென்று!

நான் யார் புரியவில்லை
நானே என்னைத் தேடுகிறேன்.
பேரொன்றின் அடையாளம்
நானென்றும் முடியவில்லை.

என்பேர் எனும்போது
இன்னும் நான் யாரென்றும்
பின்னும் எனைத் தேடுகிறேன்.
எண்ணி எண்ணி ஓடுகிறேன்.

மனதுக்குள் தனிமையில்
மௌனத்தில் அமைகிறேன்
கனவுக்குள் விரைகிறேன்
காட்சிக்குள் மறைகிறேன்.

எண்ணங்கள் தொலைகின்றன
வண்ணங்கள் ஒளிகின்றன
இருள் சூழ்ந்த சூனியத்தில்
பொருளெல்லாம் அழிகின்றன.

என்னை நான் இழக்கிறேன்
எங்கோ நான் பறக்கிறேன்.
இயற்கையில் கரைகிறேன்
இல்லாமல் ஒழிகிறேன்

மெல்லிய ஒளியொன்று
புள்ளியில் துடிப்பொன்று
வெள்ளியாய் நானென்று
சொல்லுகிறேன் கவியென்று.

கொ.பெ.பி.அய்யா.

வண்ணப் பொய் 184064 காண்க!

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (14-Mar-14, 4:15 pm)
பார்வை : 137

மேலே