அந்தி வெயில்
அந்தி வெயில் நேரத்திலே!
அழகான வரப்பினிலே!
அடிமேல் அடியெடுத்து
ஆடி அசைந்து போகையிலே!
விளைந்த நெற்கதிரும்
வளைந்த தேன் கரும்பும்
வரவேற்று நிற்குதடி!
வரம் வேண்டி பாக்குதடி!
தென்னையின் இளநீரும்
தெவிட்டாத மாங்கனியும்
தேடி என்னை நிக்குதடி!
கோடி இன்பம் கூட்டுதடி!
தேக்கு ஒரு பக்கம்
சவுக்கு ஒரு பக்கம்
காவல் காத்து நிக்குதடி!
கவிதை பாட வைக்குதடி!