மரண வாசல் பகுதி 2

பத்து நிமிடங்களுக்கு முன் :

எம்.எ.111 விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் அணைத்து ஊழியர்களும் கப்பலை பயணிக்கும் கேப்டனின் முன்னாள் நின்றிருந்தனர்.

கேப்டன் ஹரி சந்திரன். அவர்களில் மிகவும் மூத்தவர். வயதாவரும் கூட. ஆனால், அவரின் அனுபவம் நம்மை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். அந்த அளவுக்கு விமானத் துறையில் கேப்டனாக மிகவும் பக்குவப்பட்டவர்.

அவருடன் இரண்டாவதுத் தடவையாகத் துணைக் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் உதயாவிற்கு மிகவும் சிரித்த முகம். வேலையிலும் முடிந்த பட்சம் கேப்டன் ஹரி சந்திரனிடம் நல்லப் பெயர் வாங்கும் அளவுக்கு மிகவும் திறமையாகவும் நேர்த்தியாகவும் அவனுக்கிட்டப் பணிகளை செவ்வென முடிப்பான். எண்ணை என்றால் எள்ளாய் வந்து நிற்பான்.

புதிதாய் கல்யாணம் ஆனவனும் கூட. இன்னும் இரண்டு வாரங்கள் கூட சரியாக ஆகவில்லை. புதுப் பொண்டாட்டியை விட்டு விட்டு வேலைக்கு வந்து விட்டான். இந்த பயணம் முடிந்து வந்தப் பிறகுத் தான் அவனுக்கு ஹனிமூன். இதுதான், அவன் மனைவி அஞ்சலா அவனை வழியனுப்பும் முன் சொன்ன வார்த்தைகள். அதுவே அவளிடத்திலிருந்து அவன் கேட்கும் கடைசி வார்த்தையாகும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

விமானப் பணியாளர்களின் அனுபவமிக்க சீனியர் மீனா முகத்தில் ஈயாடாமல் அமைதியாய் சீறிப் பாய்ந்து போய்க் கொண்டிருக்கும் விமானத்தின் கூர்மையான முன் பக்கத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானவர். அவரின் பிள்ளைகளும் இதே விமானத் துறையில் தங்களின் பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.

கஸ்வின் இப்போதுதான் புதிதாய் பணிக்கு வந்தவன். ஏறக்குறைய 8 மாதங்களே ஆகியிருந்தன. வீட்டிற்கு ஒரே ஒரு ஆண் பிள்ளை. திடமாய் ஒன்றும் நடவாததுப் போலவே நின்றிருந்தார் அருணாச்சலம். பணியில் பல ஆண்டு காலங்கள் இருப்பவர்.

பனிமலர் கஸ்வினைப் போலவே புதியவள். இருவரும் ஒரே நேரத்தில் தான் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அரசு திருமணமானவன். முதல் குழந்தைக்காகக் காத்திருக்கின்றான். எந்நேரமும் அவன் மனைவிக்கு குழந்தைப் பிறக்கலாம். அவன் விமானதில் ஏறும் முன் அவன் மனைவி பிரசவ வார்டுக்குள் இருப்பதாய் அவன் அம்மா தெரிவித்திருந்தார்.

மஞ்சரி, தனிஷா, பனிமலர், அரசு, கஸ்வின், மீனா, அருணாச்சலம் இவர்கள் ஆறுப் பேரின் பார்வையும் ஒரு சேர கேப்டன் ஹரி சந்திரன் மீது பதிந்திருந்தது. அவர் அடுத்து சொல்லப் போவதை எதிர்ப்பார்த்து காத்திருந்தது அவர்களின் காது மடல்கள்.


வாசலை நெருங்கும்......

எழுதியவர் : தீப்ச்சந்தினி (15-Mar-14, 3:49 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 112

மேலே