மரண வாசல் பகுதி 1

அம்மா.... நாமே செத்துப் போயிருவோமா ??

அழுகையுடன் சேர்ந்த விசும்பலும் ஒருச் சேர மழலைக் குழந்தைப் பிரித்திக்கா அவள் அம்மாவைப் பார்த்துக் கேட்டாள். கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் ஊற்றியது. பிரித்திக்காவை அப்படியே நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள் அவளது தாய்.

எம்.எ.111 விமானம் கட்டுப்பாட்டை இழந்தக் காளையாய் வேகமாய் சீறிப் பாய்ந்து விண்ணில் மேகக் கூட்டங்களை இடித்தெரிந்து பயணித்தது.

தனிஷா பயணிகள் அனைவரையும் கண்ணோட்டம் விட்டவாறே முன்னிலிருந்து பின்பக்கம் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். திடிரென்று அவளது ஆரஞ்சு நிறப் பாவாடையை யாரோ பிடித்து இழுப்பதை உணர்ந்தாள். தலையைத் திருப்பிப் பார்த்தால் பிரித்திக்கா அவளை அருகே வரும்படி கை அசைத்தாள்.

தனிஷா அவள் இருக்கையின் அருகே முட்டிப் போட்டவாறே அமர்ந்து,

என்ன வேணும் குட்டிக்கு ? என்றுக் கேட்டாள் சிரித்த முகத்தோடு.

அக்கா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் செத்துப் போய்டுவேனா ?!

அவளது கேள்வி தனிஷாவின் கண்களை அகல விரிக்க வைத்தது.

பிரித்திக்காவின் அம்மாவோ,

சோரி sister தப்பா நெனச்சிக்காதிங்க ! இதுதான், first time இவுங்க flight ஏறறது. அதான், கொஞ்சம் பயந்துட்டாங்கா… அவ்ளோத்தான்…

தனிஷா குழந்தையின் தலையில் கை வைத்து அவள் கேசத்தைத் தடவி விட்டு வேகமாய் விரைந்து பின்பக்கம் சென்று விட்டாள்.

விமானப் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறையில் கண்களில் கண்ணீர் ததும்ப அமர்ந்திருக்கும் மஞ்சரியைக் கண்டு,

ஹேய்... என்னாச்சி ? என்றாள்.

அழுதுக் கொண்டே மஞ்சரி அவளைப் பார்த்து,

நாமே எல்லாம் இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கப் போறோம் ?? பிரசாந்த் என்னே propose பண்ணி இப்போதான் 2 hours ஆகுது அதுகுள்ளாரா எல்லாம் முடியப் போகுதடி.

கதறினாள் மஞ்சரி. அவளை வாரி தன் வயிறோடு அணைத்துக் கொண்டு அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள் தனிஷா.


வாசலை நெருங்கும்......

எழுதியவர் : தீப்ச்சந்தினி (15-Mar-14, 3:43 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 154

மேலே