விமானம்

சிட்டுக்குருவி போல
சின்னதாய் விமானம்
கண்களுக்கு தோன்றிய
காலம் அவை...

சைக்கிள் டயர் ஓட்டி கொண்டே
விமானம் விரட்டிய அந்த நாட்களில்
ஏனோ அதில் பயணிக்கும்
ஆசை இருந்ததே இல்லை...

மேகங்களில் எல்லாம் ரோடு
போட்டது போன்றே புகைக்
கோடுகள் அந்தி வானம் வரை
சென்று மறைந்த காலம் அது...

இதோ உலோகம் பறவையான
அற்புத விந்தை
காற்றில் மோதி மேகம்
கிழிக்கின்ற பயணம்...

இந்த உலோக பறவையின்
பயணத்தின் ஜன்னல் வழியே
எத்தனை அழகு அதிசயங்கள்...

கை தொட துடிக்கும்
மேகக் கூட்டங்கள்
கண் பார்வை தொடும் இடம்
எல்லாம் பூமியின் பசுமைகள்...

கரை தொட அடிவானம்
கடக்கும் சூரியனும்
கதிரவனின் ஒளி ஓவியமாய்
கடல் நீரும்...

பறிதவித்துப் போன
என் மனமோ
எதையுமே ரசிக்காமல்
யோசித்து கொண்டிருக்கிறது...

கண்ணாடி கதவின் வழியே
கடைசியாக கையசைத்து
கண்ணீர் மல்க நின்ற
கவலையடைந்த உறவுகளை...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 4:27 pm)
சேர்த்தது : Iam Achoo
Tanglish : vimaanam
பார்வை : 1049

மேலே