மெழுகுவர்த்தி

இருள் நீ
விலக
இரையாகிறேன்
நான்...

நீயும்
ஒளிரவே
நானும்
உருகுகிறேன்...

உன்
மூச்சில்
காற்றுப்பட்டதும்
நடனமாடுகின்றேன்...

உன்
கையிலிருந்து
நழுவாது இருக்க ...

உருகிய
மெழுகால் நான்
உன் கரம்
பற்றிகொள்கிறேன்...

திரியை
பிரியும் வலியில்
அழுகிறது
உருகும் மெழுகு...

நாழிகை
நாழிகையாக
உனக்காகவே
உயிர் இழக்கின்றேன்...

மாளிகையாய்
மலர்ந்து இருந்த
மங்கை நானும்
மாய்ந்து போகிறேன்...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 4:23 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 1300

மேலே