கைபேசி
கை பேசி கை பேசி காதல் வளர்க்கும் கைபேசி
உள்ளத்தை எழுத்தாய் உனக்கனுப்பி
உறவுகளை வளர்த்திட செய்த கைபேசி
உள்ளங்கைக்குள் அடங்கியே உலகைகாட்டும்!!
எண்ணம் பதித்து உனக்கனுப்ப
உருவத்தை கொண்டு முன்னிறுத்தும்
மகிழ்ச்சி சோகம் கஷ்டம் இஷ்டம்
எதுவானாலும் மனதில் பதிப்பாய் உள்ளபடி...!
உருவம் இல்லா பெண்ணடி
எழுத்தாய் வந்த உயிர் நீயடி
உறக்கம் தொலைத்தே இரவும் பகலும்
ஆறுதல் தந்து உறங்க செய்வதும் நீயடி!!
விண்ணில் இருந்து விழும் மழைத்துளி போலே
என்னுள் விழுந்தாய் நீயடி
என்னவளை எனக்கு அறிமுகம் செய்த தாயடி
உன்னுள் புதைந்தேன் என்னுள் விழித்தேன்!!