எத்துனை அதிசயம்

யாருக்கும் தெரியாது!
எனக்கு தெரியாது !
ஆரட்சியாளர்களாலும்
கண்டறிய முடியாது !

***********************************

என்னைப்படைத்தாய்
என்னை வளர்த்தாய்
தாயாய்,
தந்தையாய் ,
உறவுகளாய்,
தோழனாய்,
காதலனாய்,
ஆதரவாளனாய்
என்றும்
என்கூடவே இருக்கிறாய்!
எனக்குள்ளே இருக்கிறாய்!
நீயின்றி நானில்லை என்பேன்
துன்பம் வரும்போது
சண்டை போட்டதும்
இன்பத்தை கொடுப்பதும்
நீதானே!

******************************************

இந்த உலகிற்கு
நீயோ
புரியாத புதிர்!
உலகில் ஏழு
அதிசயமாம்
உலகையே படைத்த
நீ
உலகை இயக்குபவன்
நீ
எத்துனை அதிசயம்?
உன்னருளாலே
உன்தாள் வணங்கி
வாழ்வோம்.

எழுதியவர் : TP Thanesh (16-Mar-14, 12:37 am)
Tanglish : ethunai athisayam
பார்வை : 139

மேலே