மௌனம்

ஆழத்தில் அதிர்ந்தபடி
கிடக்கும் நதி போல்
நானும் நீந்தி கிடக்கிறேன்
வெறுமை விரி மணலில்
வெடித்துச் சிதறுது
வெயில் !
சொட்டு சொட்டாய்
வடிகிறது காலம்
என் காலடியில் !
பல வர்ண சிறகுகளுடன்
பறக்கும் பட்டாம்பூச்சி
என் உயிர் பறித்துச் செல்கிறது !
மண்ணில் புதைத்த
விதையின் மௌனம் போல்
நிரம்பி வழிகிறதென்
மௌனம் !
எரி தழல் புகையில்
மோகத்தின் புழுக்கத்தில்
இமைக்குள் இமை மூடி
விரல் கடித்து
வேதனை கொல்கிறேன் !
என்றோ துளிர்க்கும்
பசுமையைக் காத்து !

எழுதியவர் : thilakavathy (16-Mar-14, 12:17 am)
Tanglish : mounam
பார்வை : 79

மேலே