தப்பாக்கிய து-ர்-ப்பாக்கி

அஞ்ஞானத்தை எஞ்ஞான்றும்
துவக்கிவிடும் விஞ்ஞானத்தின்
..................முயற்சி
மூளையின் அதீத
உலைவால் ஏற்பட்ட
...................விளைவு
அறிவுத்திறன் அதிகூடியவனின்
மூளைகெட்ட பயிற்சியின்
....................அதிர்ச்சி.
உதிரத்தை குடிக்கப்பிறந்த
உயிர்கொல்லி உற்பத்தி
.....................துப்பாக்கி.
துர்ப்பாக்கியர்களை காவிடும்
துப்பாக்கிய யுகத்தின்
.....................தூண்டில் .
படுகொலை இனப்படுகொலை
சுடும்கலை கற்பிக்கும்
.....................சுலுகை.
நற்பயனென்று நினைக்கும்
நாதரிகளின் நாசகார
......................நடுவன்.
ஏண்டவன் எளியோனை
மடக்கி ஒடுக்கும்
.....................மல்லாரி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஞ்ஞானம் = அறியாமை
எஞ்ஞான்றும் = என்றென்றும்
மல்லாரி = சண்டைக்காரி
நடுவன் = இயமன்
சுலுகை = முதலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~