அழகு

பாறையில்
துளித்த
விதையும்
அழகு...

கோடையில்
துளித்த
மழையும்
அழகு...

வாடையில்
துளித்த
சூரியனும்
அழகு...

துன்பத்தில்
துளித்த
புன்னகை
அழகு...

மகிழ்ச்சியில்
துளித்த
கண்ணீர்
அழகு....

தோல்வியில்
துளித்த
நம்பிக்கையும்
அழகு...

முரண்களில்
துளித்த
வாழ்க்கை
என்றுமே
அழகு தான்....

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (16-Mar-14, 8:39 am)
Tanglish : alagu
பார்வை : 140

மேலே