பெண் அன்றும் இன்றும்
படிப்பறிவே கிடைக்காமல்
அடுப்படியே போர்க்களமாய்
ஆண்களே அடைக்கலமாய்
அகிலமறியா வாழ்க்கையாய்
வீட்டுக்குள்ளே பதுமையாய்
பூட்டிவைத்த பொக்கிஷமாய்
தனக்கான வாழ்க்கையை தவறவிட்ட
கூண்டுக் கிளிகளாய்
அன்றைய பெண்கள்!
படிப்பறிவு கொண்டு
பட்டங்கள் பல பெற்று
சட்டங்கள் பல கொண்டு
வீட்டை மட்டுமல்லாமல்
நாட்டையே வழிநடத்தி
ஆணுக்கு நிகராக
விண்வெளிக்கும் சென்று
சாதனை மட்டுமல்ல
சரித்திரத்தையே படைத்து
சிறகடித்து பறக்கிறார்கள்
இன்றைய பெண்கள்!