ஓ பௌர்ணமி நிலவே வெண் பௌர்ணமி நிலவே

ஓ பௌர்ணமி நிலவே
வெண் பௌர்ணமி நிலவே
நீல வான மேடையில்
ஆடி வரும் காதல் நாயகியே
வானரங்கில் தாரகைகள் சூழ
வெண்மை சூடி வரும் திங்களழகே
இரவெனும் இனிய புத்தகத்தை
எழுத வந்த எழில் கவிஞையே
தேய்வது வளர்வது என்ன நாடகமோ
பூமியுடன் கொண்ட காதல் ஊடலோ
அன்புடனும் வெண்மைப் பண்புடனும்
திங்களே நீ இல்லறம் நடத்தினால்
எங்களுக்கு நாளெல்லாம் பௌர்ணமி தானே !
கொஞ்சம் சிந்தித்தால் என்ன
அல்லியுடன் ஆடல் புரியும் வெள்ளி நிலாவே !
---கவின் சாரலன்